வடக்கிற்கு வரும் ரணிலுக்கு ஏற்பட்ட பின்னடைவு

வவுனியாவிற்கு விஜயம் செய்யும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நாளைய தினம் திறக்கப்படவிருந்த வவுனியா பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாது என தெரியவருகின்றது.
மரக்கறி மொத்த விற்பனையாளர்களின் கோரிக்கைக்கு உத்தரவாதம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கும் நிகழ்வை இரத்து செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பல இழுபறிகளுக்கு பின்னர் மூன்று முறிப்பு பகுதியில் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 5 வருடங்களாக திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. மரக்கறி மொத்த விற்பனையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தி வரும் அழுத்தமே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
இதேவேளை அரசியல்வாதிகளும் தமக்கான வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கே இவ்வாறு மரக்கறி வியாபாரிகளின் கதைகளுக்கு செவிசாய்த்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.
CATEGORIES செய்திகள்