பிரித்தானிய வீரர்களை கொலை செய்ய திட்டமிட்ட ஈரான்: கட்டாரில் பலத்த பாதுகாப்பு

பிரித்தானிய வீரர்களை கொலை செய்ய திட்டமிட்ட ஈரான்: கட்டாரில் பலத்த பாதுகாப்பு

கட்டாரில் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், பிரித்தானிய வீரர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பலம் பொருந்திய 14 பேர்கள் கொண்ட குழு பிரித்தானிய அணியின் பாதுகாப்புக்காக, அவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் கட்டார் அரசு களமிறக்கியுள்ளது.

பிரித்தானிய கால்பந்து அணிக்கான முதல் போட்டி நடைபெறும் நாளில் 10 பிரித்தானியர்களை கொல்லவோ, கடத்தவோ ஈரானிலிருந்து ஆட்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பிரித்தானிய அணி தமது முதல் போட்டியில் ஈரானை எதிர்கொள்ளும் நிலையில் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் சுமார் 10,000 பிரித்தானிய இரசிகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரித்தானிய அணி தங்கியிருக்கும் ஹொட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 30 அடி இடைவெளியில் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, ஒட்டக வீரர்களும் பிரித்தானிய அணியின் பாதுகாப்புக்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல், பிரித்தானியர்களை கொல்ல திட்டமிடும் ஈரானையும் போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This