தமிழக முகாமில் இலங்கை பெண் எடுத்த விபரீத முடிவு! விசாரணைகளை தீவிரப்படுத்திய தமிழக பொலிஸார்

தமிழக முகாமில் இலங்கை பெண் எடுத்த விபரீத முடிவு! விசாரணைகளை தீவிரப்படுத்திய தமிழக பொலிஸார்

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் தர்மராஜேஸ்வரன் யோகலதா வயது 36 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டின் அடிப்டையில் தாந்தோன்றிமலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS