7 லட்ச ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் மீன் சமைத்தார்களா? ஆய்வு கூறும் செய்தி என்ன?

7 லட்ச ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் மீன் சமைத்தார்களா? ஆய்வு கூறும் செய்தி என்ன?

பழங்கால மீன் பற்களின் பற்சிப்பியில் உள்ள நுண்ணிய மாற்றங்கள் வைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஒரு மண் அடுப்பில் மீன்களை சமைத்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இறைச்சிகளை நெருப்பில் சுட்டு முறையாக சமைத்து சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என இஸ்ரேலில் ஸ்டெய்ன்ஹார்ட் என்ற இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த இரிட் சோஹர் கூறுயுள்ளார்.

காட்டில் விலங்குகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த மனிதன், விலங்குகளை வேட்டியாடி முதலில் பச்சையாக சாப்பிட்டு வந்தான். பிறகு 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு , விலங்குகளை நெருப்பில் சுட்டு உண்பதற்கான வழிமுறைகள் கண்டுபிடித்தான. விலங்ககுகளை நெருப்பில் கருக்கி உண்டதற்கான ஆதாரமாக கருகிய விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து மனிதன் நெருப்பில் இறைச்சியை சமைத்து சாப்பிட்டான் என்று கூறமுடியாது. உண்மையில், வேட்டையாடி விலங்குகளை நெருப்பில் வீசி, அவை கருகிய பின்பு அவற்றை உண்டுள்ளான்.

ஆனால் 7 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு அளவாக தீயில் சமைத்து இறைச்சிகளை மனிதன் சமைக்க தொடங்கியிருக்கிறான். இதன் மூலம் நெருப்பை சரியாக கையாள கற்றுகொண்டுள்ளான். இதன் மூலம் தான் மனித வளர்ச்சியில் வாழ்வியலில் பெரிய மாற்றங்கள் நிகழ தொடங்கியுள்ளது என இரிட் சோஹர் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

ஜோஹரும் அவரது குழுவும் இஸ்ரேலின் வடக்கு ஜோர்டான் நதி பள்ளத்தாக்கில் உள்ள கெஷர் பெனோட் யாகோவ் என்ற இடத்தில் 780,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தை ஆய்வு செய்தனர். அங்கு மனித எச்சங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் அடுப்பு போன்ற அமைப்பு அதை சுற்றி 2 மீட்டர் நீளமுள்ள மீன் பற்களையும், மீன் தலையையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் கிடைத்த ஆதாரங்களை ஆராய்ச்சி செய்ததில், வேட்டையாடிய மனிதர்கள், மீன் பிடிக்கவும் கற்று வைத்திருந்திருக்கிறது. வேட்டையாடி பச்சையாக சாப்பிட்டு பிறகு நெருப்பில் வீசி சாப்பிட்டவர்கள், இறைச்சிக்கு தேவையான அளவில் நெருப்பை மூட்டி சமைத்து உண்ணும் திறனை பெற்றுள்ளனர். முறையாக சமைத்து உண்ண தொடங்கியதிலிருந்து தான் நாகரிீக மனிதனாக பரிமாண வளர்ச்சியின் வழிதடங்களில் பயணித்துள்ளான் என ஜோஹரின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

CATEGORIES
Share This

COMMENTS