உயர்நீதிமன்ற தீர்ப்பை தவறியமைக்காக பொலிஸ்மா அதிபர் நிபந்தனையற்ற மன்னிப்பு!

பொய்யான சாட்சியங்களை உருவாக்கி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை பின்பற்றாமைக்கு தான் நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவிப்பதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகருக்கு நிலுவை சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்கப்படுமெனவும் பொலிஸ் மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.சுரேராஜா, பிரியந்த ஜயவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொலிஸ் மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
CATEGORIES செய்திகள்