உடல் எடையை எளிதில் அதிகரிக்க டிப்ஸ்!

பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் ஐடி உள்ளிட்ட தொழில்சார்ந்து வேலை செய்வோருக்கு உடல் பருவம் அதிகரிக்கும். இதற்கு உடற்சார்ந்து எந்த வேலையும் செய்யாததே காரணம்.
ஆனால், கட்டிடம், பனியன் கம்பெனி, தறி உள்ளிட்ட பல வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு சாப்பிடக் கூட நேரமிருக்காது. அந்த அளவு வேலையும் கடினமாக இருக்கும், வேலைக்கு உண்ணும் உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.
ஆனால், எந்தத் துறையில் இருந்தாலும், பொதுவாக ஒல்லியாக இருப்பவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுடன், அவர்களால் கடினமான வேலைகள் செய்ய முடியாது.
ஆனால், எளிதில் உடல் எடை அதிகரிக்க, வாழைப்பழம் முந்திரி, திராட்சை, மீன் இறால், முட்டை பாஸ்தா, பாதாம்பருப்பு, ஆளிவிதை ஆகியவற்றை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை கூடி, பார்க்க எடுப்பான தோற்றத்தைப் பெறலாம்.
CATEGORIES மருத்துவம்