விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் மனைவியுடன் இணைந்த 69 வயது நபர்!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் மனைவியுடன் இணைந்த 69 வயது நபர்!

மனைவியை விவாகரத்து செய்ய 59 வயதில் வழக்கு பதிவு செய்த கணவர் ஒருவர் 10 ஆண்டுகளாக வழக்கு நீடித்து வந்த நிலையில் 69 வயதில் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தும்கூர் என்ற பகுதியை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய வழக்கு தாக்கல் செய்தார்

இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த நிலையில் விவாகரத்து வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 69வது வயதில் தனது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் மனைவியின் கரத்தை கைப்பற்றி உள்ளார். அவரை போலவே ஐந்து பேர் வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் தம்பதிகளாக இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS