800 ஆவது கோடி குழந்தை எங்கே பிறந்தது -வெளியானது தகவல்

உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளநிலையில் 800 ஆவது கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
இதன்படி 800 வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிலா அருகேயுள்ள டாண்டோ என்னும் கிராமத்தில் 800 வது கோடி குழந்தை பிறந்தது. பெண் குழந்தையான இதற்கு Vinis Mabansag என பெயர் சூட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கொண்டாடி வரும் நிலையில், அந்த குழந்தை மற்றும் தாயின் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளது
CATEGORIES Viral News