திடீரென நாடு திரும்பும் பசில்:ரணில் அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள நெருக்கடி

திடீரென நாடு திரும்பும் பசில்:ரணில் அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள நெருக்கடி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என அறியமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார்.

இதனையடுத்து மொட்டு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு நாமலிடம் கையளிக்கப்பட்டது. அவர் பதில் தேசிய அமைப்பாளராக செயற்பட்டார்.

இந்நிலையில் வரவு–செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னரே பசில் ராஜபக்ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This