மாத்தளையில் 40 மாணவிகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

மாத்தளையில் 40 மாணவிகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீரென சுகயீனமுற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (15.11.2022) பதிவாகியுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் சுகயீனம்
சுகயீனமுற்றுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளையில் 40 மாணவிகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி | 40 Female Students Admitted To Hospital In Matala

இதேவேளை 14ஆம் திகதி இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் இம் மாணவிகள் பங்குபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS