இவர்தான் ஒரிஜினல் குடிமகன்?’ 24 மணி நேரத்தில் 78 பப்களில் குடித்து சாதனை!

இவர்தான் ஒரிஜினல் குடிமகன்?’ 24 மணி நேரத்தில் 78 பப்களில் குடித்து சாதனை!

ஆஸ்திரேலியாவில் மதுப்பிரியர் ஒருவர் ஒரு நாளைக்குள் அதிகமான பப்களில் மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படும் நிலையில் அவற்றை குடித்து மகிழவும் ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ஒரு மதுப்பிரியராக வித்தியாசமான கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் டி வில்லியர்ஸ் மது அருந்துவதில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள பப்கள் ஒவ்வொன்றிலும் சென்று மது அருந்தியுள்ளார். ஒரு நாளைக்குள் 78 பப்களுக்கு சென்று ஒரு பப்பில் 125 மி.லி மதுபானம் என சுமார் 9.75 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளார்.

ஒரு நாளைக்கு அதிக பப்களில் அதிக மதுவை குடித்ததாக அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

CATEGORIES
Share This