முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட தரப்பினருக்கு கண்டியில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கண்டி புஸ்பதான அரங்கில் விமல் தலைமையிலான உத்தரலங்கா அமைப்பு நடாத்திய கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் விமல் வீரவன்ச சம்பவ இடத்தை விட்டு விரைந்து சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண போன்றோருக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு கூக்குரல் எழுப்பி அவர்களை துரத்தி அடிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கூட்டத்தை எதிர்த்தவர்களுக்கும் இடையில் கடுமையான வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
Share This