ராஜபக்ச குடும்பத்திற்கு மற்றுமொரு சிக்கல்! யோஷித தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

ராஜபக்ச குடும்பத்திற்கு மற்றுமொரு சிக்கல்! யோஷித தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் பிரதமரின் பிரதானியாக விளங்கிய யோஷித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான விதம் பற்றி இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.இதற்காக தேர்வு பணியில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.

யோஷித ராஜபக்ச கலந்துகொண்ட முக்கிய வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்று, பிரித்தானியா கடற்படைக்கல்லூரியில் உள்ள பாடநெறியாகும், இது பிரித்தானிய அரச கடற்படையின் நிறுவனமான டார்ட்மவுத் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டு பயிற்சிக்கு தெரிவான விதம் பற்றியது. தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள பல பங்குதாரர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.

CATEGORIES
Share This