பலம் பொருந்திய இராஜ்ஜியங்களுக்கிடையிலான முரண்பாடு – சிறிலங்காவின் நிலை என்ன; ரணில் பகிரங்கம்!

பலம் பொருந்திய இராஜ்ஜியங்களுக்கிடையிலான முரண்பாடு – சிறிலங்காவின் நிலை என்ன; ரணில் பகிரங்கம்!

உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளில் தலையிடுவதற்கு சிறிலங்காவிற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரிகளில் 2022ஆம் ஆண்டுடன் தொடர்புடைய 1619 பேருக்கான இளங்கலை பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வாறு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய பின்னணியில் இந்து சமுத்திரப் பிராந்தியமானது உயர் அரசியல் மற்றும் பொருளாதார பெறுமதியைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS