யாழில் போலி காணி மோசடி! சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது!

யாழில் போலி காணி மோசடி! சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது!

காணி சம்பந்தமாக சட்டவிரோதமான ஆவணங்களை தயாரித்ததற்கு துணைபோன சட்டத்தரணி ஒருவரும், ஆவணங்களை தயாரித்த, யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த ஒருவாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டத்தரணி உட்பட 10பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் அதிபர் ஆகியோர் இருவரும் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This