இரவில் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்: ஏன் தெரியுமா?

இரவில் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்: ஏன் தெரியுமா?

இரவில் காலதாமதமாக சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வரும் என்றும் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இரவில் 10 மணி 11 மணிக்கு சாப்பிட கூடாது என்றும் அதிகபட்சம் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது

இரவு 7 மணிக்குள் சாப்பிட்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஜீரண சக்திகள் சரியாக இயங்கும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இரவில் தாமதமாக உணவு சாப்பிட்டால் அந்த உணவு ஜீரணம் ஆகாது என்றும் அதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் இரவில் சாப்பிட்டு விட்டு உடனே தூங்கச் செல்லக்கூடாது என்றும் அது தூக்கத்துக்கும் இடையூறாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரவு 7 மணிக்கு சாப்பிட்டு 9 மணிக்கு மேல் தூங்குவதுதான் சிறப்பானது என்றும் நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இரவில் காலதாமதமின்றி 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

CATEGORIES
Share This

COMMENTS