மாணவி மேல் காதல்; ஆணாக மாறிய பெண் ஆசிரியை! – ராஜஸ்தானில் ஆச்சர்ய சம்பவம்!

மாணவி மேல் காதல்; ஆணாக மாறிய பெண் ஆசிரியை! – ராஜஸ்தானில் ஆச்சர்ய சம்பவம்!

ராஜஸ்தானில் உடற்கல்வி பெண் ஆசிரியை ஒருவர் தன் மாணவி ஒருவர் மேல் காதல் கொண்ட நிலையில் அவரை மணந்து கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மீரா. இவர் பயிற்சியின்போது கல்பனா என்ற கபடி விளையாட்டு மாணவியை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் பெண்ணாக இருப்பதால் தாங்கள் சேர்வதில் பிரச்சினை உள்ளதாக கருதியுள்ளார்கள்.

இதனால் கல்பனாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஆணாய் மாற முடிவெடுத்த மீரா அதற்கான பாலின மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். தற்போது ஆணாக மாறிவிட்ட அவர் தனது பெயரை ஆரவ் குந்தல் என்று மாற்றிக் கொண்டதுடன், இரு வீட்டார் சம்மதத்துடன் கல்பனாவையும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “காதலில் எல்லாமே நியாயம்தான். அதனால்தான் ஆணாக மாறி கல்பனாவை திருமணம் செய்து கொண்டேன். நான் பெண்ணாக பிறந்திருந்தாலும் என்னை நான் ஆணாகவே நினைத்தேன். அதனால் அறுவை சிகிச்சை செய்து என்னை ஆணாக மாற்றிக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This