நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் நாடாளுமன்றின் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கடந்த காலங்களைப் போன்றே இந்த ஆண்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 14ம் திகதி நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்ற கலரியில் ராஜதந்திரிகள் மட்டுமே அமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் கோரியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS