எந்த நாட்டில் வாழ்வது என்று முடிவெடுக்க முடியாததால் விவாகரத்து செய்யும் தம்பதி

எந்த நாட்டில் வாழ்வது என்று முடிவெடுக்க முடியாததால் விவாகரத்து செய்யும் தம்பதி

மலேசியாவில் பிறந்த ஹாங்காங் நடிகை ஜாக்கலின் சங் (Ch’ng) திருமணமாகி ஈராண்டில் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதற்குக் காரணம்?

திருமணத்திற்குப் பின்னர் எந்த நாட்டில் வாழ்வது என்பதைத் தம்பதியால் முடிவெடுக்க முடியவில்லை.

42 வயது ஜாக்கலின் ஹாங்காங்கிலும் சீனாவிலும் வசித்து வருகிறார்.

அவரின் கணவர் பிராயன் யாங் (Brian Yang) தைவானில் உள்ள bubble tea கடைகளின் தலைமை நிர்வாக அதிகாரி.

அவர் திருமணத்திற்குப் பிறகு ஹாங்காங் அல்லது தைவானுக்கு வந்து வசிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு பின்வாங்கியதாக ஜாக்கலின் கூறினார்.

பிராயன் கடைசியாக அவரை ஹாங்காங்கிற்குச் சென்று பார்த்தது 2021இல்.

இருவருக்கும் இடையே உறவு கசப்படைந்ததால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.

CATEGORIES
Share This