சீன கரிம உரக் கப்பலின் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு அதிகாரி நியமனம்!

சீன கரிம உரங்களை ஏற்றுமதி செய்தமை மற்றும் இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.7 மில்லியன் டொலர்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கு விசேட அதிகாரி ஒருவரை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது.
பொறுப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கரிம உரக் கப்பல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
CATEGORIES பிரதான செய்திகள்