இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது.

சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வீடுகளை வாங்குபவர்கள் இன்று முதல் 2 லட்சம் டொலர் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் வரை விசா பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This