நான்கரை இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நான்கரை இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஐஸ் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாவனை நாட்டில் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கரை இலட்சம் இளம் தலைமுறையினர் அபாயகரமான முறைியில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருட காலமாக வரையறுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஹெரோயின், அபின் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருளைக் காட்டிலும் தற்போது ஐஸ் ரக போதைப் பொருள் மற்றும் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது.

ஐஸ் ரக போதைப் பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் பெரும்பாலானோர் அடிமையாக உள்ளனர். மாணவர்களில் பெண் பிள்ளைகளும் இவ்வாறு ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This