8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா!

8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா!

மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கப்பல் ஓகஸ்ட் 12ஆம் திகதி ஈக்குவடோரியல் கினியா கடல் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச கடல் பகுதியில் கைது செய்யப்பட்டது.

பின்னர், அங்குள்ள துறைமுகம் ஒன்றில் கிட்டத்தட்ட 04 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பணம் செலுத்திய பின்னரே கப்பலை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தமது கப்பல் நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதால், இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டை கப்பலில் இருந்த இலங்கையர்கள் கோரியுள்ளனர்.

கப்பலில் 16 இந்தியர்கள், 8 இலங்கையர்கள், ஒரு போலந்து நாட்டவர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் உட்டபட மொத்தம் 26 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS