ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித புகழாரம் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித புகழாரம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளை தாம் பாராட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஓரளவு இயல்பு நிலை திரும்புவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க ஆற்றிய பங்களிப்பை பொது மக்களும் அங்கீகரித்துள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முயற்சிப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டு குறித்து உறுதியான பதிலை ராஜித சேனாரத்ன வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This