இந்தியாவில் ஆடவரின் நெஞ்சில் பாய்ந்த 5 அடி மூங்கில் கம்பம்- அகற்றி மறுவாழ்வு கொடுத்த மருத்துவர் குழு

இந்தியாவில் ஆடவரின் நெஞ்சில் பாய்ந்த 5 அடி மூங்கில் கம்பம்- அகற்றி மறுவாழ்வு கொடுத்த மருத்துவர் குழு

இந்தியாவின் ஒடிசா மாநில மருத்துவர்கள் ஆடவர் ஒருவரின் நெஞ்சில் பாய்ந்த 5 அடி நீள மூங்கில் கம்பத்தை வெற்றிகரமாக அகற்றி அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

ஆடவரின் பெயர் தபான் பரிடா (Tapan Parida).

கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு, தமது வயலுக்கு அருகில் நீரின் அளவைச் சோதித்துக்கொண்டிருந்தார் தபான்.

அப்போது அவர் தடுமாறிக் கீழே விழுந்ததில் அங்கிருந்த மூங்கில் கம்பம் அவரது மார்பில் பாய்ந்து, பின்புறம் கழுத்துக்கு மேலே வெளியானது.

அந்தக் கொடூரச் சம்பவத்தில் கையைக் கூட அசைக்க முடியாமல் நிலைகுலைந்து போனார் தபான்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தபானைக் குடும்பத்தினர் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Kalinga Institute of Medical Sciences எனும் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் மணிக்கணக்கில் அறுவை சிகிச்சை செய்தனர்;

6 பேர் கொண்ட மருத்துவர் குழு இறுதியில் மூங்கில் கம்பை அகற்றி அவரைக் காப்பாற்றியது.

சிக்கலான அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியதாக The Hindustan Times இணைய நாளேடு கூறியது.

தபான் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS