செல்வந்தர் இலோன் மஸ்க்கைப் போல நடித்ததால் Twitter தளத்தின் சில பிரபலக் கணக்குகள் முடக்கம்

செல்வந்தர் இலோன் மஸ்க்கைப் போல நடித்ததால் Twitter தளத்தின் சில பிரபலக் கணக்குகள் முடக்கம்

Twitter உரிமையாளர் இலோன் மஸ்க்கின் பெயருடன் இருந்த சில பிரபலமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அந்தக் கணக்குகளில் ஒன்று நகைச்சுவைக் கலைஞர் கேத்தி கிரிஃபினுக்குச் (Kathy Griffin) சொந்தமானது.

அந்தக் கணக்குக்கு முன்பு நீலக்குறியீடு (verified) வழங்கப்பட்டது. முடக்கப்பட்டதற்கு முன்னர் கிரிஃபின்னின் கணக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்தனர்.

“மற்றவர்களின் பெயரைக் கொண்டுள்ள கணக்குகள், ‘நகைச்சுவைக்கானது’ என்று தெளிவாகக் குறிப்பிடாமல் இருந்தால், அவற்றைத் தளம் நிரந்தரமாக முடக்கிவிடும்”

என்று மஸ்க் அவரது கணக்கில் குறிப்பொன்றைப் பதிவேற்றம் செய்தார்.

CATEGORIES
Share This

COMMENTS