குரங்கு காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் – வைத்தியர் எச்சரிக்கை!

குரங்கு காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் – வைத்தியர் எச்சரிக்கை!

குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு முறையான கை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

மேற்கூறிய முறைகள் அடிப்படைத் தடுப்பு முறையாகப் பயன்படுத்தப்படும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அது தீவிரமாக இருக்கும் என்றும் மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

பெரியம்மை மற்றும் சின்னம்மைக்கு இடையில் உள்ள ஒரு வைரஸ் குரங்கு வைரஸ் என்றும் அது கொப்புளங்களாகத் தோன்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குரங்கு அல்லது பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி நாட்டில் இல்லை என்றும் எனவே அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பேணுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

இந்த நோய் தோலில் இருந்தும் வாய் உட்பட சாதாரண தொடர்புகள் மூலமாகவும் பாலியல் தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்கள் வரை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் அதே படுக்கை, துண்டு அல்லது படுக்கை துணியால்கூட வைரஸ் பரவக்கூடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முறையான கை கழுவுதல் மற்றும் தூய்மை மிகவும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, காய்ச்சலுடன் கூடிய சொறி, தோல் புண் போன்ற குரங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கோ அல்லது வேறு எந்த பொது இடத்திற்கோ அனுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

CATEGORIES
Share This