IMF முன்வைத்த முன்மொழிவுகளை நிராகரித்ததா இலங்கை? -ஷெஹான் சேமசிங்க விளக்கம்

IMF முன்வைத்த முன்மொழிவுகளை நிராகரித்ததா இலங்கை? -ஷெஹான் சேமசிங்க விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட இரண்டு முன்மொழிவுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சைக்காகவோ அல்லது அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் வசதிகளுக்காகவோ பணம் அறவிடுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS