பொலிஸார் வேறுவிதமாக நடந்து கொண்டார்கள்! வீடியோ காட்சிகள் இருக்கின்றன – ஹிருணிகா பரபரப்புக் குற்றச்சாட்டு

பொலிஸார் வேறுவிதமாக நடந்து கொண்டார்கள்! வீடியோ காட்சிகள் இருக்கின்றன – ஹிருணிகா பரபரப்புக் குற்றச்சாட்டு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருணிக்கா பிரேமச்சந்திர இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (SLHRC) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது தாம் உட்பட பல பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில் தான் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ​​தன்னுடன் வந்த இரண்டு பெண்களை, பொலிஸ் அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இது போன்ற போராட்டங்களில் சில தள்ளுமுள்ளுகளும் இருக்கும், ஆணோ பெண்ணோ என்பது முக்கியமல்ல, அவர்கள் தற்செயலாக ஒருவரையொருவர் தொடுகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் எங்களிடம் சுய கட்டுப்பாடு உள்ளது. ஆனால் பொலிஸார் வேறுவிதமாக நடந்து கொண்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோ காட்சிகள், குற்றம்சாட்டப்படும் பொலிஸாரின் பெயர்கள் மற்றும் அவர்களின் எண்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஹிருணிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

CATEGORIES
Share This

COMMENTS