வெயில் தாங்காம 15 ஆயிரம் பேர் பலி; 3 மாசத்துல..? – அதிர்ச்சி தகவல்!

வெயில் தாங்காம 15 ஆயிரம் பேர் பலி; 3 மாசத்துல..? – அதிர்ச்சி தகவல்!

ஐரோப்பாவில் கடந்த சில மாதங்களாக வீசிய கடும் வெயில் தாளாமல் 15 ஆயிரம் பேர் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் கோடைக்காலத்தின்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் தாக்கியது. மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் சூழல் உண்டானது. முக்கியமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 3 மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப தாக்கம் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜெர்மனியில் 4,500 பேர், ஸ்பெயினில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கடும் வெப்பத்தால் ஸ்பெயினில் பல நீர்நிலைகள், ஏரிகளே வற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.

CATEGORIES
Share This