ஆளும் கட்சியில் இணையும் எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள்..!

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியின் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதிக்கு ஆதரவு வெளியிட்டு இவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்பும் வகையில் சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்கில் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் 12 பேர் ஏற்கனவே இந்த யோசனைக்கு ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
CATEGORIES செய்திகள்