போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது

தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.

டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது.

இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டடுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை போராட்டக்காரர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த சிலையும் சேதமாக்கப்பட்டது.

டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS