விஜய்யின் ஹிட் பாடல்களின் தொகுப்பு.. வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாட்டுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு!

விஜய் பாடிய ஹிட் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டு, வாரிசு படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விஜய் படங்களைப் பொறுத்தவரை பட அறிவிப்பிலிருந்து ரிலீஸ், வசூல் என எல்லாமே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அந்த வகையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இதைத் தொடர்ந்து, எப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். நேற்று மாலை 6.30 மணிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ அறிவிப்பு வெளிவந்தது. இதன்படி விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் நாளை மாலை வெளியாகிறது.
The next song to join this playlist arrives Tomorrow nanba ❤️#RanjithameFromTomorrow 5:30 PM#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries #Ranjithame #Varisu #VarisuPongal pic.twitter.com/APIBRsWuRf
— Sri Venkateswara Creations (@SVC_official) November 4, 2022