நிதியமைச்சர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்! ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நிதியமைச்சர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்! ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நால்வருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவையில் புதிய நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தற்போது அமைச்சு பதவிகளை வகிக்கும் சில எம்.பி.க்களின் பதவிகளும் மாறுவதுடன், நிதியமைச்சர் பதவியிலும் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இருபத்தி ஒன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உட்பிரிவுகளில் ஒன்று, பாதுகாப்பு அமைச்சர் பதவியைத் தவிர வேறு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிக்க முடியாது.

அதன்படி, இப்போது ஜனாதிபதி நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கை அமைச்சராக பதவி வகிக்க முடியாது. எனவே தற்போது வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் அலி சப்ரியை மீண்டும் நிதியமைச்சராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This