இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்படடுள்ளார்.

பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகவை இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் போது இதேபோன்ற சம்பவத்தில் குணதிலக ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் குணதிலகவை அவரது நண்பரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

எனினும் அவரது நண்பர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தனுஷ்கவுக்கு சம்பவத்துடன் தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This