அரசாங்கதுடன் இணைய தயாராகும் ஐ.மக்கள் சக்தியின் மற்றுமொரு முக்கியஸ்தர்

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர் ஒருவர் மிக விரைவில் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அந்த கட்சியின் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதி. இவர் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் அறிந்திருப்பதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இணைந்து்கொள்வதற்கான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசியல்வாதியின் புதல்வரே மேற்கொண்டு வருகிறார்.
சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர், ஐக்கிய மக்கள் சக்தி இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன இணைய வேண்டும் என நீண்டகாலமாக கருத்து வெளியிட்டு வருபவர். இதனை அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ குழுக்கூட்டங்களில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான ராஜித சேனாரத்ன தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருவதுடன் அவரும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.