வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்.பல்கலை மாணவி பலி!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்.பல்கலை மாணவி பலி!

வவுனியாவில் நேற்று நள்ளிரவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் வயது 32, தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் வயது 24 ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நள்ளிரவு 12.15 மணியளவில் பாலத்தில் மோதுண்டு தடம் புரண்டுள்ளது.

இதன்போது பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதோடு, பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS