இந்தியா மற்றும் இலங்கை இடையே ஆரம்பிக்கப்படவுள்ள உத்தேச கப்பல் சேவை!

இலங்கை இந்தியாவிற்கான இரண்டு படகுச் சேவைகள், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விமான போக்குவரத்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என துணைத்தூதர் ராகேஷ் நடராயா தெரிவித்துள்ளார்.
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்திற்கும் இந்திய தூரக்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் நில ஆக்கிரமிப்புகள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் மண்ணெண்ணனை பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை இலங்கை இந்திய போக்குவரத்து உட்பட பல்வேறு விடயங்கள் ராகேஷ் நடராஜாவுடன் பேசப்பட்டுள்ளன.
இதன் போதே இந்திய துணைத்தூதுவர் மேற்படி விடயம் தொடர்பாக உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்கள் தொடர்பான பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
CATEGORIES செய்திகள்