காரின் மீது சாயந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்தவர் கைது!

காரின் மீது சாயந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்தவர் கைது!

கேரளாவில் உள்ள தலச்சேரியில் நேற்றிவு காரில் சாய்ந்து நின்றிருந்த சிறுவனை எட்டி உதைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பொன்னியம்பலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது விஹ்ஷாத். இவர் நேற்றிரவு கண்ணூர் தலச்செரியில் உள்ள துணிக்கடைக்குச் சென்றிருந்த நிலையில், தன் காரை வெளிப்புறமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அங்கு, வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 5 வயது சிறுவன், அந்தக் காரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அப்போது, வந்த ஷிஹ்ஷாத், அந்தச் சிறுவனை எட்டி உதைத்தார்.
இதில், முதுகில் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

CATEGORIES
Share This