எதிர்வரும் தேர்தலில் பிரியமாலி வெற்றி பெறும் வாய்ப்பு: வெளிவரும் நாட்டின் மோசமான நிலவரம்

எதிர்வரும் தேர்தலில் பிரியமாலி வெற்றி பெறும் வாய்ப்பு: வெளிவரும் நாட்டின் மோசமான நிலவரம்

பிரியமாலி நாளை தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறும் நிலையில் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமானதாக உள்ளது என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

இலங்கை மக்கள் மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம். நாட்டின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணபுர்வு என்பது மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது.

இதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான பொருத்தமான நபர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இதனை மாற்றாமல் எங்களால் ஊழல், மோசடி நிறைந்த அரசியல் முறைமையையோ அல்லது சமூகத்தையோ தெரிவு செய்ய முடியாது.

மொடல்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் அவர்களிற்கு அதிக வாக்குகளை வழங்குகின்றனர்.

இதேவேளை சிறைச்சாலையிலிருந்து விடுதலையான நபர் ஒருவர் விடுதலையான பின்னர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது.”என கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS