தமிழர் தாயக காணி அபகரிப்பின் பின்னணியில் பிள்ளையான் – கடுமையாக சாடிய சாணக்கியன்

தமிழர் தாயக காணி அபகரிப்பின் பின்னணியில் பிள்ளையான் – கடுமையாக சாடிய சாணக்கியன்

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதேச அபிவிருத்திகுழு கூட்டங்களை நடத்தாமல், வெள்ளிக்கிழமை வாகரை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடத்தப்படுகிறது.

இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும் குறிப்பாக வாகரையை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இதற்கு பிள்ளையான் துணை போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS