சீனாவால் ஏற்பட்ட பேராபத்து..! இன்று பூமியை தாக்கப்போகும் விண்கலம்

சீனாவால் ஏற்பட்ட பேராபத்து..! இன்று பூமியை தாக்கப்போகும் விண்கலம்

சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலத்தின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து, 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலம் ஒன்று கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி புவி வட்டபாதைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விண்கலம் இன்று பூமியை நோக்கி விழும் என தகவல் வெளியாகியுள்ளது.

லாங் மார்ச் 5பி விண்கலம்

இந்த லாங் மார்ச் 5பி என்ற விண்கலமானது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விபரங்களை சீனா உறுதியாக குறிப்பிடவில்லை.

இந்த விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறும்போது, ​​​​அவை பெரும்பாலும் வளிமண்டலத்தில் எரிந்து, கீழே தரையில் சிறிய ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் லாங் மார்ச் 5பி விண்கலமானது சுமார் 108 அடி (33 மீட்டர்) நீளமும் 48,500 பவுண்டுகள் (22 ஆயிரம் கிலோ) எடையும் கொண்டது.

10% முதல் 40% வரை பூமியை தாக்கும்

இத்தகைய அளவு கொண்ட விண்கலத்தில் இருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதும் எரியாமல் பூமியில் எங்காவது தாக்கக்கூடும்.

விண்கலத்தின் 10% முதல் 40% வரை பூமியை தாக்கும் என்று மதிப்பிடுகிறது.

CATEGORIES
Share This