போதைப் பொருள் பாவனை- சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விஷேட குழு!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விஷேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தக் அகுழு நியமிக்கப்பட்டது.
இதற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
CATEGORIES செய்திகள்