கொழும்பில் பெருந்தொகை நிதி மோசடி! சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றுமொரு நிதி நிறுவனம்

கொழும்பில் பெருந்தொகை நிதி மோசடி! சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றுமொரு நிதி நிறுவனம்

திலினி பிரியமாலியின் திக்கோ கூட்டுத்தாபனத்தின் நிதி மோசடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சந்தேகத்திற்குரிய நிதி நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 35ஆவது மாடியில் இயங்கி வந்த திலினி பிரியமாலியின் திக்கோ கூட்டுத்தாபனத்தின் நிதி மோசடி நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற மற்றொரு சந்தேகத்திற்குரிய நிதி நிறுவனம் பற்றிய பல உண்மைகள் வெளியாகி வருகின்றன.

உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் இலங்கை மக்களிடம் பெருந்தொகை பணத்தினை வசூலித்துள்ளமை தெரியவந்துள்ளது.

வர்த்தக வங்கியொன்றில் தொடர்பு
எனினும், குறித்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கியொன்றில் கணக்கை வைத்து இலங்கை மக்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார இணைய சேனலுடனான உரையாடலில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS