நாமலை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி ரணில் – தொடரும் உள்ளக மோதல்

நாமலை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி ரணில் – தொடரும் உள்ளக மோதல்

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் செயற்பட்ட அமைச்சரவை தற்காலிக அடிப்படையில் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் நியமிக்கப்பட்டது.

நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு பல தடவைகள் திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

நாமல் நிராகரிப்பு

விசேடமாக பொதுஜன பெரமுனவினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்க யோசனை வழங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

அதற்கமைய, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விரைவில் புதிய அமைச்சரவை

காலநிலை மாற்றம் தொடர்பான உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்துக்கு செல்லவுள்ளார்.

அந்த விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அமைச்சரவையிலும் குறித்த மூவருக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படாதென கூறப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS