உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்…?

உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்…?

அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் குறைகிறது மற்றும் வியர்வையை கட்டுப்படுத்துகிறது.

வெள்ளை வெங்காயம் தினம்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகப்படுத்துகிறது.

வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது. வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம்.

அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என ஆய்வுகள் சொல்கின்றன.

வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கும்.

CATEGORIES
Share This

COMMENTS