கோமாளியானார் சஜித்..! விகாராதிபதி தேரர் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோமாளித்தனமாக செயற்படுகிறார் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலாவாஹெங்குனவெவே தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இரண்டு அதிபர்கள் அழைத்த போது அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளாது இன்று வீதியில் இறங்கி மக்களை அணி திரட்டுவது நகைப்பிற்குரியது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நகைச்சுவையூட்டும் வகையில் செயற்படக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டங்கள்
இன்று வீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் வலாவாஹெங்குனவெவே தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களை ராஜ துரோகிகளாக கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றின் உள்ளேயே ஜனநாயக ரீதியில் தீர்வு எட்டப்பட வேண்டுமென மிகிந்தலை ரஜமஹா விகாராதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுற்றுலா கைத்தொழிலுக்கும், சாதாரண பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் போராட்டங்கள் தடையை ஏற்படுத்தும் என அவர் கண்டித்துள்ளார்.