அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகும் மஹிந்த? – புதிய கூட்டணியில் போட்டியிடுகிறாரா ரணில்?

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகும் மஹிந்த? – புதிய கூட்டணியில் போட்டியிடுகிறாரா ரணில்?

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரணிலுடன் எதிர்கால அரசியலை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சு நடத்தும் மொட்டுக்கட்சியினர்

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்த கூட்டணியுடன் எதிர்கால அரசியலை முன்னெடுப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, அவரது அனுபவம் என்பன காரணமாக அவரது தலைமையில் கூட்டணியை உருவாக்குவது மிக சரியான முடிவாக இருக்கும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்க தயாராகி வரும் நிலைமையில்,ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது சிறந்த தீர்மானமாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

இனிவரும் காலங்களில் நாட்டுக்கு தேவைப்படுவது தீவிரமான பொருளாதார முகாமைத்துவம் எனவும் அதற்கு தகுதியான அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்க என தமது கட்சியை சேர்ந்த பலரது நிலைப்படாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பிரதாயபூர்வமான அரசியலில் இருந்து விடுப்பட்டு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கும் அரசியலில் இருப்பு இருக்காது.

இதனால், கட்சி முத்திரைகளுடன் மேற்கொள்ளும் அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுஜன பெரமுனவின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS