பதவி விலக தயாராகும் ஹரீன் பெர்னாண்டோ

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சுற்றுலாத்தறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதவி விலகுவது பற்றி அறிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிலைமைகள் வழமைக்குத் திரும்பினால் அமைச்சுப் பதவியை துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் எண்ணக்கரு
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் எண்ணக்கரு மிகச் சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வட்டாரத்திலிருந்து விலகி அந்த சமூக இயக்கத்தில் இணைந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக பிளவு
இன, மத மற்றும் மொழி அடிப்படையில் இந்த சமூகம் பிளவுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச சுயநலவாதி எனவும் ஜனாதிபதியாவதனை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தை ஜனாதிபதியாக்குவது உசிதமான தீர்மானம் அல்ல எனவும் அது மேலும் குழப்பங்களை விளைவிக்கும் எனவும் ஹரீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.