கட்டுப்பாடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்றன – சர்வதேச மன்னிப்புச் சபை

கட்டுப்பாடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்றன – சர்வதேச மன்னிப்புச் சபை

தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளமை கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

அமைதியான முறையில் கூடும் போராட்டங்கள் போன்ற அடிப்படை மனித உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, எதிர்ப்பாளர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ் மேற்கோள் காட்டிய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச சட்டத்தின்படி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு எதிரான சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்றன என தெரிவித்துள்ள அந்தச் சபை, அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் என்பது ஒரு உரிமை என்றும் அது சலுகை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்த உரிமையை எளிதாக்குவதற்கு அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

முன்னதாக கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS